"An attractive space for talented musicians & artists. Showcase your talent, collaborate, inspire, and grow."
தங்க தேவதைகளின் வெற்றிக்கு பின்னால்
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னல் ஒரு பெண் இருப்பார் என்பார்கள் அனால் இரண்டு பெண்ணின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் ஒரு ஆணின் கதை தான் டாக்டர் மோகனின் கதை. தன் கனவுகளை தன் கண்களில் சுமந்து தன் மனைவி சுஜாதாவின் கனவுகளை மனதினில் சுமந்து தன் மகள் ஸ்வேதாவின் கனவுகளை தோள்களில் சுமந்து கொண்டிருக்கிறார் டாக்டர் மோகன். இரண்டு இதயங்கள் தீட்டும் அற்புத ஓவியமே வாழ்கை என வாழ்வை வண்ண ஓவியமாக மாற்றியவர்.
ரோஜா பூவின் மேண்மை எல்லாம் உந்தன் மனம்தானே காலை பனியின் தூய்மை எல்லாம் உந்தன் குணம் தானே உன்னாலே இசை என்னும் நீர் வீழ்ச்சி உன்னாலே எந்தன் மலர்க்கட்சி என சுஜாதா பாடிய பாடலுக்கு ஏற்ப சுஜாதாவின் வாழக்கையில் இணைந்து ஒன்றியவர். காதல் ஓவியம் கண்டனே என சுஜாதாவை கண்டு சுஜாதா என்னும் இனிய மனதை அழைத்து அவர் வாழ்வில் புது வெள்ளை மழையை பொழிய வெய்து சொல்லாமலே ஆனந்தத்தை காதலால் பாடி சுஜாதாவின் மெல்லிசையை சந்திரனை தொட வைத்து அதிசய குரலை இரவும் பகலும் ஒலிக்க வைத்து எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என வானவில்லை கரைத்து இல்லமெங்கும் வண்ணமடித்து அழகான இள மான் ஒன்றை இசையின் சகலகலா வல்லவளாக்கி தன் மனைவியின் கனவுகளை தித்திக்க செய்து காற்றின் மொழியாய் உலவ விட்டவர். சுஜாதா போகும் இடம்மெல்லாம் காற்று உள்ளதா என்று தெரியாது
ரோஜா பூவின் மேண்மை எல்லாம் உந்தன் மனம்தானே காலை பனியின் தூய்மை எல்லாம் உந்தன் குணம் தானே உன்னாலே இசை என்னும் நீர் வீழ்ச்சி உன்னாலே எந்தன் மலர்க்கட்சி என சுஜாதா பாடிய பாடலுக்கு ஏற்ப சுஜாதாவின் வாழக்கையில் இணைந்து ஒன்றியவர். காதல் ஓவியம் கண்டனே என சுஜாதாவை கண்டு சுஜாதா என்னும் இனிய மனதை அழைத்து அவர் வாழ்வில் புது வெள்ளை மழையை பொழிய வெய்து சொல்லாமலே ஆனந்தத்தை காதலால் பாடி சுஜாதாவின் மெல்லிசையை சந்திரனை தொட வைத்து அதிசய குரலை இரவும் பகலும் ஒலிக்க வைத்து எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என வானவில்லை கரைத்து இல்லமெங்கும் வண்ணமடித்து அழகான இள மான் ஒன்றை இசையின் சகலகலா வல்லவளாக்கி தன் மனைவியின் கனவுகளை தித்திக்க செய்து காற்றின் மொழியாய் உலவ விட்டவர்.
சுஜாதா போகும் இடம்மெல்லாம் காற்று உள்ளதா என்று தெரியாது ஆனால் சுஜாதா போகும் இடமெல்லாம் இவர் கைகள் கோர்த்தே இருக்கும். தாயாக சில நொடிகள் தந்தையாய் சில நொடிகள் குழந்தையாய் சில நொடிகள் சுஜாதா என்னும் பெண் இசை கிளியின் வரம் இவர்.
ஸ்வேதா வின் வாழ்க்கையை அச்சமில்லாமல் எதிர் கொள்ள ஒரு நொடியா இரு நொடியா இன்றளவிலும் தன் விழிகளில் வைத்து பொத்தி சின்ன சின்ன கனவுகளிலும் கை வீசி நடந்து ஸ்வேதாவின் வாழ்வை மழையின் சாரலில் நனையவைத்து யாருமில்லாத இடத்தில் கூட துணை நின்று நானே வருவேன் என செய்து காட்டிய அற்புத தந்தை. மாச்சோ என்னாச்சோ என காதலில் விழுந்தாலும் ஓடும் நீரில் ஓடம் போல வாழ வாழ வாழ்த்தி இசை கனவு மற்றும் இல்லற கனவையும் சேர்த்து பரிசளித்த உன்னை பற்றி இன்னும் என்ன சொல்ல எது சொல்ல சொல்ல வார்த்தைகளே இல்ல . தன் மகள் மற்றும் மனைவியின் ஆசைகளை தன் சந்தோசமாய் நேசிக்கும் இசை பிரியன், பாடகர், மருத்துவர் டாக்டர் மோகன்.