"An attractive space for talented musicians & artists. Showcase your talent, collaborate, inspire, and grow."
இசையின் அனார்கலி
ஒரு நதி நதியாக பாயும் இயற்கை மட்டுமே நம் கண்களுக்கு தெரியும். ஆனால் அது நதியாக பாய நீராக உற்று எடுத்து மலை கடந்து காடு மேடு கரடு முரடு பள்ளம் என அத்தனையும் சந்தித்தால் மட்டுமே நதியாக பாய முடியும். இப்படி தன் வாழ்வை பல சோதனைகள் கடந்து சாதனை நதியாக மாறி 25 ஆண்டுகளாய் பாய்ந்து கொண்டு இருக்கும் நதி தான் இந்த கங்கை நதி.
இவர் கங்கா கிருஷ்ணனாக ஆக 16 டிசம்பர் கோழிக்கோடு, கேரளா, வில் பிறந்தார். கர்நாடக சங்கீதத்தில் டிப்ளமோ முடித்த இவர் மியூசிக் அகாடமியில் சங்கீத ரத்தனாவும் வாங்கி உள்ளார். இவர் தமிழ் தெலுகு மலையாளம் கன்னட மொழிகளில் 1000 கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். முயற்சியை மட்டுமே மூலதனமாக கொண்டு இசையில் நுழைந்தவர். இசையின் பல கதவுகளை தட்டிய இவருக்கு 90களில் ஆர் ரஹ்மானுக்காக பல படங்களில் பின்னணி ட்ராக்ஸ் மற்றும் ஹார்மோனிஸ் என மெல்ல திறந்தது இசை கதவு. பின் ட்ராக்ஸ் பாடும் பாடகியானார். 90களில் இவர் ட்ராக் பாடாத இசை அமைப்பாளர்களே இல்லை எனலாம். பக்ஷி என்னும் மலையாள திரைப்படத்தில் ஜான்சன் மாஸ்டர்காக பாடிய "சூர்யாம்ஷவோரோ" டூயட் பாடலில் தன்னை பின்னணி பாடகியாக அடையாள படுத்தினார். இசை உலகில் ஏ.ஆர்.ரஹ்மான், கீரவாணி, இளையராஜா, மணிசர்மா, தேவா, கோட்டி, ரமணா, கோகுலா, வித்யாசாகர்,யுவன் ஷங்கர் ராஜா, சிற்பி, ஹரிஷ் ஜெயராஜ், எஸ். ஏ. ராஜ்குமார், ரமணி, பஹத்வாஜ், தீபக் தேவ்,M. ஜெயச்சந்திரன், அல்போன்ஸ், ஜான்சன் ஆகியோருடன் இணைந்து பணி ஆற்றி உள்ளார்.
1995 இல் முத்து திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் "கொக்கு சைவ கொக்கு "
1997 இல் பொன்மனம் திரைப்படத்தில் எஸ். ஏ. ராஜ்குமார் இசையில் "நிலவினை தொட்டு "
1999 இல் காதலர் தினம் திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் "நெனச்சபடி " தாஜ் மஹால் திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் "அடி மஞ்ச கிழங்கே" "கிழக்கே நந்தவனம் "
2000 இல் தீபாவளி திரைப்படத்தில் கீரவாணி இசையில் "பானு வர்ஷா"
2001 இல் வருஷமெல்லாம் வசந்தம் திரைப்படத்தில் சிற்பி இசையில் அடி அனார்கலி ஸ்டார் திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் "மச்ச மச்சினியை " பார்த்தாலே பரவசம் திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் " பார்த்தாலே பரவசம்"
2003 இல் நம்ம ப்ரீதியா ராமு திரைப்படத்தில் இளையராஜா இசையில் "துட்டில்தே ஹோடாறு "
2004 இல் அஞ்சி திரைப்படத்தில் மணிசர்மா இசையில் "ஓம் சாந்தி"
2005 இல் தேவதையை கண்டேன் திரைப்படத்தில் தேவா இசையில் "அழகே பிரம்மனிடம்"
2007 இல் திரைப்படத்தில் மணிசர்மா இசையில் "மாம்பழம்"என இவரின் ஹிட் பட்டியல் நீளும்.
இவர் பாடிய அடி அனார்கலி, அழகே பிரம்மனிடம், மாம்பழம் ,கண்டுபிடி கண்டுபிடி பாடல்களுக்கு மவுசு அதிகம். இதில் அடி அனார்கலி ட்ராக் வெர்சன் கேட்ட பாடகி சுஜாதா கங்காவே நன்றாக பாடி உள்ளார் நான் எதற்காக மீண்டும் பாட வேண்டும் என கேள்வி எழுப்ப இவர் குரலிலேயே வெளிவந்து சக்கை போடு போட்டது.
தமிழ்நாடு சினிமா கலை மன்றம் விருதை சமுத்திரம் தேவதையை கண்டேன் ஆகிய படங்களுக்காக வாங்கியுள்ளார். 2007 லயன்ஸ் கிளப் இவருக்கு "கான குயில்" விருதும் வழங்கியது. 2000கும் மேற்பட்ட ஸ்டேஜ் ஷோஸ்களிலும் பாடி உள்ளார். தற்போது ஜீ சரிகமப வில் ஜூரியாக அமர்ந்துள்ளார். குரலால் யாவற்றயும் உயிர்பிக்கும் இவர் புகைப்படத்தால் யாவற்றயும் உயிர்பிக்கும் சிற்றரசு என்பவரை மணந்து இரு ஆண் குழந்தைகளால் ஆசிர்வதிக்கபட்டார். தனக்கு கிடைத்த வாய்ப்புகள் அத்தனைகளிலும் சிக்ஸர் அடித்து பெயர் பணம் புகழ் இவற்றை தாண்டி பாடி கொண்டே இருக்க வேண்டும் என்பதை மட்டுமே லட்சியமாக கொண்ட இசையின் நாயகி இவர்.
எழுதியவர்: திருமுருகன்