top of page

 

பண்முகி

                       - டாக்டர் ஷர்மிளா

 

 

 

 

 

 

 

கடவுளால் ஒரு நாளைக்கு நிர்ணயிக்கப்பட்ட நேரம் இருபத்திநான்கு மணி நேரம். அந்த இருபத்திநான்கு மணி நேரத்தையும் பயனுள்ளதாய் பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி கண்டவர்கள் பலர். ஆனால் அந்த இருபத்திநான்கு மணி நேரத்திலும் தன்னுடைய பண்முக தன்மையை வெளிப்படுத்தி உலகில் தங்களை தனிதன்மையோடு நிலை நாட்டி கொண்டவர்கள் வெகு சிலர் மட்டுமே.

 

அந்த வெகு சிலர்களில் ஒருவர் தான் டாக்டர் ஷர்மிளா. மருத்துவர், சின்னத்திரை,நடிகை, வெள்ளித்திரை நடிகை, தயாரிப்பாளர், தொகுப்பாளினி, பாடகி, பரதநாட்டியம் கற்றவர் என ஷர்மிளா அவர்களின் கதாபாத்திரங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். மருத்துவம் படித்த டாக்டர் ஷர்மிளா தன்னுடைய தொலைக்காட்சி அனுபவத்தை ஜெயா டிவி ஜெ ஜெ டிவி என்ற பெயரில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தபோதே அதில் வினா விடை நிகழ்ச்சிகளில் தொடங்கினார்.

 

பின்னர் “இந்த வாரம் இவர்” என்ற நிகழ்ச்சியும் தொகுத்து வழங்கினார். பின் மருத்துவர் மாத்ருபூதத்துடன் இனைந்து இவர் நடத்திய “புதிரா புனிதமா” அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தமிழில் முதல் பாலியல் கல்வி நிகழ்ச்சியை தைரியமாக தொகுத்து வழங்கினார் டாக்டர் ஷர்மிளா. பின் இயக்குனர் பாலச்சந்தர் இந்த நிகழ்ச்சியை பார்க்க அவரின் தொடரான “ஜன்னல்” மற்றும் “இரண்டாம் சாணக்யனில்" வாய்ப்பளித்தார்.

 

 

பின் “நம்பிக்கை” மற்றும் “ஆடுகிறான் கண்ணன்” மூலம் தமிழ் இல்லங்களில் ஒருவரானார் டாக்டர் ஷர்மிளா. பின் தன்னுடைய சமையல் திறமையையும் விஜய் டிவி யின் “கிச்சன்  சூப்பர் ஸ்டார் டபுள்ஸ்” என்னும் நிகழ்ச்சியில் வெளிப்படுத்தி மூன்றாவது பரிசு வென்றார் டாக்டர் ஷர்மிளா. அசைவம் சமைக்க தெரியாத மற்றும் சாப்பிடாத இவர் அசைவம் சமைத்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

 

கருத்தமுத்து என்ற மலையாளம் சீரியலுக்காக சிறந்த குணசித்ர நடிகை விருதை வென்றார் இவர். இவர் விஜய் அவார்ட்ஸிலும் பகல்நிலவு தொடருக்காக சிறந்த வில்லிக்கான நாமினேஷனிலும் இடம் பெற்றார். தற்போது ஸ்ம்யூளில் தன்னை பாடகியாகவும் நிலை நாட்டி வருகிறார் டாக்டர் ஷர்மிளா.

 

இது தவிர தன்னுடைய சொந்த பாரா மெடிக்கல் கம்பெனியும் நடத்தி வருகிறார் டாக்டர் ஷர்மிளா. அஜித்துடன் சேர்ந்து “சிடிஸின்” நடிகர் தனுஷுடன் சேர்ந்து “படிக்காதவன்” மற்றும் “மாப்பிள்ளை” “பலே பாண்டியா” “கல்யாண சமையல் சாதம்” என பல திரைப்படங்களிலும் வலம் வந்தார் டாக்டர் ஷர்மிளா. பின் “அத்தி பூக்கள்” “கார்த்திகை பெண்கள்” என தொடர “வள்ளி” “பகல் நிலவு” என இன்றளவிலும் சின்னத்திரையில் கொடி கட்டி பறக்கிறார் டாக்டர் ஷர்மிளா. 

WhatsApp Image 2018-07-15 at 4.18.54 PM
bottom of page